Monday, July 26, 2010

மார்லன் பிராண்டோ(03.04.1924 - 01.07.2004)

"முதல் நாள் படபிடிப்பில் முதல் ஷாட் ஓகே ஆனதும்
என் களிப்பைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக நான் ஆபரேட்டிவ் கேமராமேனிடம் அவரது தோளைத் தட்டி -குட்" என்றேன்
அவரோ "இல்லை ,வியு ஃபைண்டர் வழியாக என்னால் மார்லனைப் பார்க்க முடியவில்லை
கால்கள் உதறலெடுக்கின்றன" என்றார்.
பெர்னார்டோ பெர்ட்டோலூச்சி
இயக்குநர் - லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்


"கேமரா முன்பு நின்றவுடன் பைத்தியக்கார மனநிலைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் கொள்ளும்.
தன்னைச் சுற்றி நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் தனது இருப்பின் ஆளுமையால் ஒடுங்கச்செய்துவிடுவார்.
அப்போது, ஒரு பறவை சத்தமிட்டால் கூட அதனை வெறுமனே தன் ஒற்றை பார்வையால் அடங்கச் செய்துவிடுவார்".

சிட்னி லூமட்வ்
இயக்குநர்-ப்யூஜிட்டீவ் கைண்ட்


"தலைமுறைகளைக் கடந்தும் நடிகர்களின் நாயகன் அவர் ஒருவர் மட்டுமே.
ஒரு மூத்த நடிகராக அவரிடம், ஒரு இளைய நடிகன் சற்றுக் கூடுதலாகவோ குறைவாகவோ
சில பழந்தன்மைகளைக் காண நேரிடலாம் என்றாலும், அவர் நடிகர்களைக் கொள்ளையடிக்கும் நடிகர்"

பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ
இயக்குநர் -காட்பாதர்

2 comments:

  1. தஞ்சை மைந்தனே வருக,
    தேன்சுவை பதிவுகள் தருக!

    ReplyDelete