Monday, August 16, 2010

சிதைவு-2

விட்டத்தில் இரட்டைமுடிபோட்ட
கயிரு ஒன்று என் கழுத்து எழும்பினை முறிப்பதற்காக காற்றில் அசைந்த வண்ணம் உள்ளது

கட்டிலின் கால்களுக்கிடையில்
ஒற்றைக் கண்கொண்ட பாம்போன்று என்னைத் தீண்டுவதற்காய் படமெடுத்தபடி மேலேறுகிறது

குளியலைறையின் குழாய் வழியே
கருமைநிற அட்டைகள் என் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக கொட்டுகின்றன

கழிவறையின் மழக்கழிவுகளில்
என் உணவினை பாழ்படுத்தும் கரப்பான்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்காக முட்டையிடுகின்றன

அகோரப்பசிக் கொண்ட கருத்த எலிகள்
என் கால்சட்டைகளை கடித்து
என்னை நிர்வானப்ப்டுத்துகின்றன

புத்தகச் சந்துகலையெல்லாம்
உண்டுவிட்ட அறிப்பெடுத்த கரையாண்கள் என் மூளையையும் செல் அறித்து விட்டன

வெறிகொண்ட நாயோன்று
என் பின்பக்க கறியை ருசிப்பதற்காக எச்சில் ஒழுக என் வீட்டு வாசலில் படுத்துகிடக்கிறது

நான் இறந்தபிறகு
என் மிச்சங்களை உண்பதற்காக பிணந்திண்ணி புழுக்கள் தோட்டத்தில் அருவருப்பாய் நெளிகின்றன.

உன் நினைவுகளோடு சிரமில்லாமல் உறங்கி கொண்டிருக்கிறேன்.

4 comments:

  1. இதற்காகவேனும் ஒரு வலி தேவைப்படுகிறது.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. என்னைக் கொலை செய்ய எப்பொழுதும் என் நிழல் உடன் வந்துகொண்டே இருக்கிறது. நிழலின் கையில் அசையும் குறுங்கத்தியின் நிழலையும் நானறிவேன். என்றாவது நானோ என் நிழலோ முந்திக்கொல்லலாம். ஆனால் என் பிணத்தருகே என் நிழல் விழுந்துவிடக்கூடாதென்பதற்காத்தான் சாவைத் தள்ளிப்போடுகிறேன். தற்கொலையையும் சேர்த்து.

    வாழ்த்துக்கள் மாப்பிளை தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete