
வேட்டையில் கிடைத்தவற்றை ஆதி மனிதன் தன் இனக் குழுவிற்கு கொண்டு வருகிறான்...
காடு மலை திரிந்த அவனது அனுபவங்கள் அவனை கதை சொல்ல வைக்கிறது...
உணவு தயாராவதற்குள் தன் குழுவைச் சார்ந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்...
அவன் வேட்டையாடிய கதைகளை தன் உடல் மொழியின் மூலமாகவும் ஒசையின் மூலமாகவும் விளக்குகிறான்
மொழி தோன்றுவதற்கு முன்பே உடல்மொழி தோன்றிவிடுகிறது.
வார்த்தைகளற்ற அந்த கானகத்தின் ஒசைகளும் உடல் அசைவுகளும் அவன் வேட்டையாடிய அனுபவங்களை கதைகளாக உருப்பெறச் செய்கின்றன ...
நடிப்பை உருவாக்குகிறோம் என்று உணராமலேயே கதைச்சொல்லியாகவும், நடிகனாகவும் உருமாறுகிறான்...
கதைகளை சுவாரஸ்யபடுத்த வண்ணங்களை மேலே பூசி கொள்கிறான்...
இசையை முறைப்படுத்துகிறான் ...
ஆயுதங்களை கலைக் கருவிகளாக மாற்றுகிறான்...
முதல் நாடகம் உருப்பெறுகிறது.
ஓசையின் தொன்மையை எப்படி நாம் இயற்கையின் தொன்மையொடு தொடர்புபடுத்திக் கொள்வது போல்,
உடல் மொழியின் தொன்மையையும் உயிர் உருவாக்கதின் தொன்மையொடு நாம் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்....
மொழியின் மூலவடிவமாக ஓவியங்களைச் சொல்கிறோம்
ஆனால், அதனை விடவும் தொன்மையானது உடல்மொழி...
மனிதன் வரைகலையை உருவாக்குவதற்கு முன்பே உடல்மொழியைமுறைபடுத்திவிடுகிறான்.
உடல் மொழியின் பரிணமித்த வடிவமே நடிப்பென்று நம்மால் அனுமானம் செய்ய முடிகிறது ...
மனிதகுலத்தின் ஆதிமொழி- இன்று நடிப்பாக பரிணமித்து உள்ள உடல்மொழியே ஆகும்.
அதிநுண் அனுமானம். எனில் வேட்டையரில் இருந்தே கலை பிறந்திருக்குமா?ஆயின் விரிவாய் பகிரவும்..
ReplyDeleteகலையின் பரிணமிப்பை நான் ஆராய்ச்சிக்கு உட்படுத்தவில்லை...
ReplyDeleteநடிப்பின் தொன்மையை பற்றியே பேசியுள்ளேன்...
வேட்டை கதைகள் தான் முதல் கதைகள் என்பது என் அனுமானம் அல்ல ஆராய்ச்சியாளர்களின் அனுமானம் ....
வீரமும் காதலும் தான் கலையை வளர்த்தெடுத்தன என்பது நம் அனைவருக்கும் தெரிந்தவையே...
ஆதி மனிதனுக்கும் இது பொருந்தும் என்றே நினைக்கிறேன்.